மகாராஷ்டிரத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

0 5215
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

மகாராஷ்டிர அரசு ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக ஆயிரத்து 606 பேருக்குக் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை முப்பதாயிரத்து எழுநூற்றைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 135ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் மும்பை, தானே, புனே, மாலேகான், அவுரங்காபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலத்திலேயே உள்ளன.

ஊரடங்கு இன்று முடிவடைய இருந்த நிலையில், அதை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உதவியாக இருப்பதால், மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments