விமானப் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய உத்தரவு

0 2681
விமானப் பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது செல்பேசிச் செயலியைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானப் பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது செல்பேசிச் செயலியைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது செல்பேசிச் செயலியைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

முகக்கவசம் அணிந்திருக்கவும், ஒருவருக்கொருவர் குறைந்தது 4 அடி இடைவெளி பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. அடிக்கடி கைகளைக் கழுவவும், கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

அலுவலகத்திலோ வீட்டிலோ இருந்தபடி இணையம் வழியாகச் சோதனை செய்யவும், சோதனை முடிந்தபின் பெறும் அனுமதிச் சீட்டைக் கையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments