நாய் : உயிர் கொ(எ)டுப்பான் தோழன்..!

0 5865

குழந்தையைப் போல பாவித்து, அதற்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தால் உயர்ரக நாய்களை எளிதாக வளர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயர்ரக, வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

வீட்டுக்குக் காவல், வேட்டைக்குத் தோழன், நன்றியுள்ள நண்பன் என்று மட்டுமே அறியப்பட்டவை நாய்கள்.

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதுகாத்து வரும் நாய்கள், சில நேரங்களில் தன்னுயிரைக் கொடுத்து தன்னை வளர்த்தவரின் உயிரைக் காப்பாற்றிய விதங்கள் ஆச்சரியமாகப் பேசப்பட்டன.

இந்த நிலையில்தான் சென்னை ஆவடி அருகே மொறை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வளர்த்து வரும் ரோட்வேலர் வெளிநாட்டு ரக நாய் சிறுவனை கடித்து குதறியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். உயிர் காப்பான் தோழனாக விளங்கும் நாய்கள், திடீரென இதுபோன்று கொடூரமாக மாறுவதற்கு முழு காரணமும் அதனை வளர்ப்பவர்களும், வளரும் சூழலுமே என்கிறார் கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம்.

இது ஒருபுறம் இருக்க உயர்ரக நாய்களுக்கு உரிய பயிற்சி அளித்து, அதனை ஒரு குழந்தை போல நினைத்து வளர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். தினமும் அதற்காக நேரம் ஒதுக்கி, அதனுடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இதனால் நம்மைப் பற்றியும், நமது குடும்பத்தைப் பற்றியும் நாய்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் என்பதும் அவர்களின் கருத்து.

நம்மைப் போலவே நாய்களும் பல்வேறு உணர்வுகளைக் கொண்டவை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நிபுணர்கள் கூறியதைப்போல குழந்தையைப் போல பராமரித்தால் சென்னையில் நடந்ததைப் போல கொடூரச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments