740 பயணிகளுடன் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ராஜதானி ரயில்

0 815

டெல்லியில் இருந்து 740 பயணிகளுடன் இரண்டாவது ராஜதானி சிறப்பு ரயில் நேற்றிரவு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தது.

பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பணம் செலுத்தியவர்கள் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.மற்றவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வரும் வரை தங்க வைக்கப்படுவர்.

பாதிப்பு இல்லாதவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்குப் பின் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் வீடுகளிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments