புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ராகுல்காந்தி சந்தித்துப் பேசியது வெறும் விளம்பரத்திற்காக-அமைச்சர் ஆர்.கே.சிங் விமர்சனம்

0 1400

டெல்லியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சந்தித்துப் பேசியது வெறும் விளம்பரத்திற்காக என்று மத்திய அமைச்சர் ஆர்கே சிங் விமர்சித்துள்ளார்.

உத்ரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹரியானாவில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக 130 கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே சென்றனர். டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் இருந்த தொழிலாளர்களை முக கவசம் அணிந்தபடி ராகுல்காந்தி சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஆர்கே சிங், கடந்த 50 நாட்களுக்குப் பிறகு தான் தொழிலாளர்கள் பற்றி ராகுல்காந்திக்கு நினைவுக்கு வந்ததாக என்று கேள்வி எழுப்பினார். மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து வரும் நிலையில், விளம்பரத்திற்காக இவ்வாறு ராகுல் செய்துள்ளதாக அவர் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments