பெண்ணின் உடலை பிளேடால் கிழித்து.. கை-காலை முறித்தனர்..! ரகசிய காதல் தண்டனை

0 15420

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பஞ்சாயத்தை மீறி கணவன் இருக்க காதலனுடன் சுற்றிய பெண்ணை பிளேடால் கிழித்து கொடுமைபடுத்திய உறவினர்கள், கையையும், காலையும் முறித்து தண்டனை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாலமலை கெம்மம் பட்டியை சேர்ந்த சின்னகுள்ளன் என்பவரது மனைவி கலா. இவர்களுக்கு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கலாவுக்கு, சின்னசாமி என்பவருடன் முறையற்ற காதல் ஏற்பட்டுள்ளது.

இதை கணவரும் கணவரின் உறவினர்களும் பலமுறை கண்டித்துள்ளனர். அண்மையில் கலாவை அழைத்து ஊர் பஞ்சாயத்தில் வைத்து காதலன் சின்னசாமியை சந்திக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். ஆனால் கட்டுபடாத கலா, சம்பவத்தன்று காட்டிற்கு விறகு எடுத்து வர செல்வதாக கூறிவிட்டு, சின்னசாமியை சந்தித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதைபார்த்த கணவர் சின்னகுள்ளனின் உறவினர்கள் கலாவை காட்டுப்பகுதியில் வைத்து ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியதோடு உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்ததோடு, இடது கையையும், வலது காலையும் முறித்து தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மறுநாள் காலை அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கை, மற்றும் கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே கலாவை கொலை செய்ய முயன்றதாக கணவர் சின்னகுள்ளனின் உறவினர்களான செல்லப்பன்,குமார், ((தங்கராஜ)), ரவி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கணவரும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் காதலனுடன் சுற்றிவந்த கலாவுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தாக்கியதாகவும், ஒரு கட்டத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து தூக்கி வீசி விட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கலா மீதான இந்த தாக்குதல் குறித்து கணவர் சின்னகுள்ளனிடம் விசாரணை நடத்த வீட்டிற்குச்சென்ற போலீசார், அங்கு அவர் சாராயம் காய்ச்சுவதை அறிந்து அவரையும் கைது செய்தனர்.

கணவனோ, மனைவியோ கருத்துவேறுபாடு ஏற்பட்டால் சுமூகமாக பிரிந்து செல்வதை விட்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டினாலும் தவறான உடல்சார்ந்த தேடல் எப்போதும் உயிருக்கு ஆபத்து என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த கொடூர தாக்குதல் சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments