விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்அறிவிப்பு

0 1577
இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவில், தனியார் நிறுவனங்கள் அனுமதிக கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவில், தனியார் நிறுவனங்கள் அனுமதிக கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மாலை யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

குறிப்பாக, செயற்கைக்கோள் தயாரிப்பு, செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்டவற் றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன்தெரிவித்தார்.

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கியப் பங்காற்றுவதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங் களைத் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.

ஓவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டு பிரிவு உருவாக்கப்படும் என அறிவித்த அவர், முதலீடுகளை ஈர்ப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்படும் என்றார். ஒட்டு மொத்தமாக 8 முக்கிய துறைகளிலும் கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments