உச்சத்தை தொட்ட கொரோனா... பலி 3 லட்சத்தை தாண்டியது

0 2366
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 லட்சத்து 40 ஆயிரத்தையும், பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 லட்சத்து 40 ஆயிரத்தையும், பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டியுள்ளது. 

உயிர்க்கொல்லி நோயான கொரோனாவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவதோடு, தங்களது உயிரையும் இழந்து வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 46 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேபோல் கொரோனா நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. நோய் தொற்றிலிருந்து 17 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், 25 லட்சத்து 65 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்திலுள்ள அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 88 ஆயிரத்தையும் கடந்துள்ளது. 2ம் இடத்திலுள்ள ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 27 ஆயிரத்து 400ஆகவும் அதிகரித்துள்ளது. 3ம் இடத்திலுள்ள ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 72 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 537ஆக உள்ளது.

4 முதல் 6 வரையிலான இடங்களிலுள்ள பிரிட்டன், இத்தாலி, பிரேசில் நாடுகளில் பாதிப்பு 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. பிரிட்டன், இத்தாலியில் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பிரேசிலில் 14 ஆயிரமாகவுள்ளது.

7 முதல் 10 வரையிலான இடங்களிலுள்ள பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஈரான் நாடுகளில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து அதிகமாகவும், பலி எண்ணிக்கை ஆயிரகணக்கிலும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments