சென்னையில் ஒரே நாளில் 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிப்பு

0 14470
சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கொரானா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் சென்னை முழுவதும் 690 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த பாதிப்பு சற்றே குறைந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் அந்த எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நாளில் 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 116 பகுதிகளும், திருவிகநகரில் 119 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments