பருவ மழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை

0 2060
தென் மேற்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தென் மேற்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில் மாவட்ட வாரியாக பேரிடர் மேலாண்மை திட்டம் அமைக்கவும், மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உடைகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீட்பு பணியின் போது சமூக இடைவெளியை உறுதி செய்யவும், சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நிவாரண முகாம்களை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை தொடர்ந்து கிருமி நாசினியால் சுத்தப்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.

புயல் தாக்க வாய்ப்புள்ள இடங்களில் உள்ள தனிமை மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments