தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு தற்போது கடன் தேவையில்லை, பணம் தான் தேவை.. ராகுல்காந்தி

0 2109
உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது குறித்துப் பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது குறித்துப் பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, இப்போது அறிவித்துள்ள ஊக்குவிப்புத் திட்டத்தைப் பிரதமர் மோடி மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஏழை மக்களுக்கு இன்றைய தேவை கடன் இல்லை பணம் என்றும், அதனால் உழவர்கள், தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணத்தைச் செலுத்துவது, ஊரக வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகரிப்பது ஆகியவை பற்றிப் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மக்களின் கைகளுக்கு நேரடியாகப் பணம் சென்று சேரச் செய்வது இப்போது முதன்மையானது எனவும் தெரிவித்தார். தன்னுடைய வேண்டுகோள் அரசியல் அறிக்கை இல்லை என்றும், நாட்டு மக்களின் சார்பில் இதைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments