கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா..!

0 2837

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் சீனாவை இந்தியா, பெரு ஆகிய நாடுகள் முந்தியுள்ளன. 

இப்பட்டியலில் 11 இடத்தில் சீனாவும், 12ஆவது இடத்தில் இந்தியாவும் இருந்தன. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 85ஆயிரத்து 940ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து 82 ஆயிரமாக பாதிப்பு எண்ணிக்கை உள்ள சீனாவை இந்தியா முந்தி 11ஆவது இடத்துக்கு வந்தது. இதேபோல் பெரு நாட்டிலும் பாதிப்பு 84ஆயிரத்தை தாண்டியதால் அப்பட்டியலில் அந்நாடு 12ஆவது இடத்துக்கு வந்தது. இதன்காரணமாக சீனா 13ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments