இங்கிலாந்தில் தொழில்துறை எஸ்டேட்டில் பயங்கர தீ விபத்து

0 414

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்துறை எஸ்டேட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் 120 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments