இந்தியாவில் 86,000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு.. பலி 2,752ஆக அதிகரிப்பு..

0 943
நாடு முழுவதும் கொரோனா பலி 2,752ஐ தாண்டியது

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 752ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா நோயால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, பலியானோர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார துறை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா நோய்க்கு 24 மணி நேரத்தில் 103 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 940ஆக அதிகரித்துள்ளது. அந்த நோயால் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 752ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 53 ஆயிரத்து 35 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2ம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன. முதலிடத்திலுள்ள மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 100ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்து 68 உயர்ந்துள்ளது.

2ம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆகவும், பலி எண்ணிக்கை 71ஆகவும் உயர்ந்துள்ளது. 3ம் இடத்திலுள்ள குஜராத்தில் கொரோனா நோயால் 9 ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 606 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 30 ஆயிரத்து 153 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 6 ஆயிரத்து 564 பேர் குணமாகியுள்ளதாக மத்திய சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments