சென்னையில் காய்-கனி விலை பலமடங்கு உயர்வு

0 1624

சென்னை திருமழிசை சந்தையை விட பலமடங்கு அதிகமான விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவியதால், இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகர எல்லையில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தற்காலிகச் சந்தை தொடங்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து பொருட்களை வாங்கி வரும் சில்லறை வியாபாரிகளுக்கு, போக்குவரத்துச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திருமழிசையில் 8 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ தக்காளி நகர்ப்புறங்களில் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் சந்தையை விட சிறு கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் பல மடங்கு விலை உயர்வுடன் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments