டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் இரண்டாவது ரயில்

0 1014

டெல்லியில் இருந்து இன்று இரவு இரண்டாவது ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு  வர உள்ளது.

நேற்று பிற்பகல் இந்த ரயில் டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 1200 பயணிகளுடன் புறப்பட்டது.

முதல் ரயில் கடந்த 14ம் தேதி வந்தது. இதில் பயணித்த 800 பயணிகளுக்கு பரிசோதனை ந டத்த அவர்கள் அரசு முகாம்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது ரயிலிலும் இதே நடவடிக்கைகள் தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களைத் தவிர வேறு சிறப்பு ரயில்களை மே 31 வரை இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments