நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை

0 3832

திங்கள் கிழமை முதல் துவங்க உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

உள்துறைச் செயலர் அஜய் பல்லா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக அவர் விவாதித்ததாக  உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

நான்காம் கட்ட ஊரடங்கு முதல் 3 ஊரடங்குகளில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என பிரதமர் மோடி கடந்த செவ்வாய் அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிகளை தீர்மானிப்பது பற்றி அமித் ஷா நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments