கத்தாரில் மாஸ்க் கட்டாயம்.. ரூ 41.70 லட்சம் அபராதம்..! ஊருக்கே இல்ல.. ஒருத்தருக்கு தான்..!

0 3401
கத்தார் நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா

கத்தார் நாட்டில் ஒரே நாளில் 1733 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் இந்திய பணமதிப்புக்கு 41 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே புரட்டி எடுத்து வரும் கொரோனா நோய் தொற்றுக்கு அஞ்சி ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அளவுக்கு புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

அந்தவகையில் மக்கள் தொகை 138 கோடிகளை கடந்த நம் நாட்டில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகின்றது.

அந்த 100 ரூபாய் வசூலிப்பதே மக்களை நோய் பரவலில் இருந்து காப்பதற்கும், முன் எச்சரிக்கையாக முகக்கவசம் அணிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை உணராமல் முகக்கவசம் வாங்க கூட பணமில்லை என்று விமர்சனம் செய்வதற்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசின் அறிவுறுத்தலுக்கு பின்னரும் பலர் மாஸ்க் அணிவதில்லை. அபராதம் கேட்டால் வம்பு செய்வதும் தொடர்கின்றது.

இந்த நிலையில் 30 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அரபு நாடான கத்தார் நாட்டின் அரசு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மெகா அபராத முறையை கையில் எடுத்துள்ளது.

கத்தாரில் இதுவரை 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 1733 பேருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதியானதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகின்றது கத்தார் அரசு.

அதன்படி கத்தாரில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் இன்றி வீட்டில் இருந்து வெளியே வரும் நபருக்கு அபராதமாக 55,000 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 41 லட்சத்து 70 ஆயிரத்து 677 ரூபாய் 50 காசு அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கத்தாரில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அப்படி இருக்க அவர்கள் முகக்கவசத்தை மறந்து வெளியே சென்று சிக்கினால் வாழ்நாளில் அவர்கள் சம்பாதித்த மொத்த தொகையையையும் ஒற்றை மாஸ்க்குக்காக அபராதமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கே சம்பளம் மட்டும் அதிகம் இல்லங்க, அபராதமும் அதிகம் தான்..! மாஸ்க் அணிந்து கொரோனா பரவுதலை தடுப்போம்...! அபராதம் கட்டாமல் சம்பாதித்ததை காப்போம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments