தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

0 1157

கொரோனா காலத்தில் கட்சிச் செயல்பாடுகள் குறித்து ஆராய, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட திமுக  செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் தி.மு.க.வினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மாவட்ட வாரியாக இதுகுறித்த விவரங்களை ஸ்டாலின் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments