அடங்க மறுக்கும் கொரோனா அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

0 3726
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா காவு வாங்கிய 71 பேரில், 48 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா காவு வாங்கிய 71 பேரில், 48 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் உச்சத்தை எட்டிய கொரோனாவின் வீரியம் ஒரிரு நாட்களாக சற்று தணிந்து, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 310 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 940 ஆக உயர்ந்தது.

திருவள்ளூரில் ஒரே நாளில் 21 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, செங்கல்பட்டில் 20 பேரும், காஞ்சியில் 11 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை மற்றும் தேனியில் தலா 6 பேர் பாதிக்கப்பட, கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட, திண்டுக்கல், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

கொரோனா காவு வாங்கிய 71 பேரில், 48 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், செங்கல்பட்டில் 4 பேரும் திருவள்ளூரில் 3 பேரும் கொரோனாவுக்கு இரை ஆக, மதுரை விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்.

கோவை , கடலூர் , திண்டுக்கல் , ஈரோடு , காஞ்சி , கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, நெல்லை மற்றும் வேலூரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 783 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை, 5 ஆயிரத்து 114 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த
24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், வீடு திரும்பியோரின்எண்ணிக்கை 7 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 19 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments