தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்..!

0 2738
கடன் வழங்கும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.

கடன் வழங்கும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் ஆகிய அமைப்புகளை சார்ந்த தொழில் முனைவோரிடையே, காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

 அப்போது பேசிய அவர், தமிழக அரசு அளித்த சிறப்பு சலுகைகளின் விளைவாக, சுமார் 1500 நிறுவனங்கள் கொரோனா நோய் தடுப்புக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை துவங்கி இந்தியா முழுவதும் வழங்கி வருவதாக கூறினார். வல்லுநர் குழுவின் அறிக்கைப்படி ஊரடங்கில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சூழ்நிலையைப் பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும் என்றார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளை பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஊக்குவிக்க, தலைமை செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி விரைவாக ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொழில் முனைவோர் தன்னை சந்திக்க விரும்பினால் 24 மணி நேரத்தில் நேரம் ஒதுக்கித் தரப்படும் என்ற முதலமைச்சர் கூறினார்.

தொழில் முனைவோருக்கும் தொழில் துறையினருக்கும் தமிழ்நாடு அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து தொழில் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments