நம்பிக்கை ஒளியில் பாரதம்... 3ஆவது கட்ட சலுகைகள்

0 2413
விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பர படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெல், கோதுமை, வெங்காயம் போன்றவற்றை எந்தளவுக்கு வேண்டுமானாலும் இருப்பு வைத்து கொள்ளலாம் என அனுமதி வழங்கி உள்ளார்.

விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பர படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெல், கோதுமை, வெங்காயம் போன்றவற்றை எந்தளவுக்கு வேண்டுமானாலும் இருப்பு வைத்து கொள்ளலாம் என அனுமதி வழங்கி உள்ளார்.

20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக, புதுடெல்லியில் 3ஆவது நாளாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 3ஆவது கட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார்.

பீம் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு 64 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 10 ஆயிரம் கோடி ரூபாய் சிறு குறு உணவு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பர படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இந்த நிதி மூலம் சிறு தானியங்கள், ஆர்கானிக், மூலிகை பொருட்களுக்கு விளம்பரம் செய்யப்படும் என்றார்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்த நிர்மலா சீதாராமன், தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள் - பழங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

நெல், கோதுமை, வெங்காயம் போன்றவற்றை எந்தளவுக்கு வேண்டுமானாலும் இருப்பு வைத்து கொள்ளலாம் என அனுமதி வழங்கிய நிர்மலா சீதாராமன், இதன் காரணமாக விவசாயிகள் விளை பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்து லாபம் ஈட்ட முடியும்
என்று நம்பிக்கை தெரிவித்தார். வெங்காயம், தக்காளி, பருப்புகள், போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தேனி வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிப்பதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு - டிஜிட்டல் முறையில் பொருட் களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதற்காக சட்டம் கொண்டு வரப்படும் - உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு இருக்காது - என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments