கொரோனாவால் உயிரிழப்போருக்காக கல்லறைகள் காத்திருக்கும் அவலம்

0 5819
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக சிலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகள் தோண்டப்பட்டு தயார் நிலை வைக்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக சிலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகள் தோண்டப்பட்டு தயார் நிலை வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு 350 முதல் 500 வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்து 500 ஆக எகிறி உள்ளது.

இதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக தலைநகர் சாண்டியாகோவில் கல்லறைகள் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள், சாலைகளிலும், லாரிகளிலும் அழுகியது போன்ற அவலம் தங்கள் நாட்டிலும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments