கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 94 வயது மூதாட்டி

0 1310
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 94 வயது மூதாட்டி

மகாராஷ்டிராவில் 94 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் காட்சி வெளியாகியுள்ளது.

சாங்க்லியிலுள்ள (Sangli) மிராஜ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அந்த மூதாட்டி சிகிச்சை பெற்று வந்தார். தனிவார்டில்  2 வாரகாலம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவருக்கு கொரோனா நோய் முழுவதும் குணமடைந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து மூதாட்டி அண்மையில் வீடு திரும்பினார். அப்போது மருத்துவர்களும், செவிலியர்களும் கைதட்டி  மூதாட்டியை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

இந்த வீடியோ காட்சி வெளியாகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments