இந்தியா விமானப்படைக்கு வலிமை சேர்க்க வருகிறது ரபேல் போர் விமானங்கள்

0 1442
4 ரபேல் போர் விமானங்கள் வரும் ஜூலை இறுதிக்குள் இந்தியா வருகிறது

பாகிஸ்தான், சீனாவை ஒட்டிய எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் 4 ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சிடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இரு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், திட்டமிட்டபடி மே மாதத்திற்குள் ரபேல் விமானங்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இரு இருக்கைகள் கொண்ட 3 பயிற்சியாளர் விமானம் மற்றும் ஒரு இருக்கை கொண்ட போர் விமானம் அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட இருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்கட்டமாக 7 விமானிகள், விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை பிரான்சில் நிறைவு செய்துள்ள நிலையில், 2வது குழு விரைவில் பயிற்சிக்கு செல்ல இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments