கோடை விடுமுறையிலும் வழக்கமான பணி மேற்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு

0 910

கோடை விடுமுறை காலத்தில் ஜூன் 19ம் தேதி வரை வழக்கமான பணியை மேற்கொள்வதென்று உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மார்ச் 23 முதல் முக்கியமான வழக்குகள் மட்டும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டன. இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை காலத்திலும் மே 18 முதல் ஜூன் 19 வரை காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரின் கருத்துகளையும் பரிசீலித்தபிறகு, இந்த முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது.

விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 18 முதல் உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறையாகும். ஜூலை 6ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றம் தொடங்கும். தற்போது வழக்கமான பணியை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதால், விடுமுறை குறித்த முடிவை தலைமை நீதிபதி பிறகு எடுப்பார் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments