புகையிலை விற்பனை, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும்-அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஹர்ஷ்வர்த்தன் கடிதம்

0 883

கொரோனா பரவலைத் தடுக்க புகையிலை விற்பனைக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும்  தடை விதிக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் இதுதொடர்பாக அவசர சட்டம், உத்தரவு வெளியிட்டுள்ளன. அதை சுட்டிக்காட்டி,  அவர்  எழுதியுள்ள கடிதத்தில், புகையிலையை பயன்படுத்துவோர்  பொது இடங்களில் எச்சில் துப்புவதால் கொரோனா, பன்றி காய்ச்சல், டி.பி., யானைக்கால்  போன்ற நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார். புகையிலை விற்பனைக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் தடை விதிப்பதன்மூலம் சுத்தமான இந்தியாவோடு, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளால் உதவ முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments