கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 100 கோடி டாலர் உலக வங்கி கடனுதவி

0 805
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 100 கோடி டாலர் உலக வங்கி கடனுதவி

கொரோனா பாதிப்பு காரணமாக ஏழை எளிய மக்களுக்காக மேற்கொள்ளப்படும் சமூக நலப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, இந்தியாவுக்கு 7500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஏற்கனவே 100 கோடி டாலர் கடனுதவி அளிக்கப்படும் என்று கடந்த மாதம் உலக வங்கி அறிவித்திருந்த நிலையில், மேலும் 100 கோடி டாலர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 75 சதவீதம் வரும் ஜுன் மாத இறுதிக்குள்ளும், எஞ்சிய 25 சதவீதம் அடுத்த ஆண்டு ஜுன் மாத இறுதிக்குள்ளும் 2 கட்டங்களாக வழங்கப்பட இருக்கிறது.

இது தவிர சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குனர் ஜுனாய்த் அகமத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments