ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக தடுப்பு அமைப்பதிலும் மாற்றம்

0 1314

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வசிக்கும் தெருக்கள் மட்டுமே, இனி, இரும்புத்தகரம் கொண்டு அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அந்த தெரு முழுவதும் இரும்பு தகரம் கொண்டு அடைக்கப்பட்ட நிலையில், தற்போது 5 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால், அதுவும் நோய் அறிகுறிகளுடன் இருந்தால் மட்டுமே தெரு முழுவதும் இரும்பு தகரம் கொண்டு அடைக்கப்படும் என்றும், ஓரிருவர் பாதிக்கப்பட்டிருந்தால் நோயின் தீவிரத்தைப் பொறுத்து அவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் அல்லது அந்த வீடு மட்டும் இரும்புத் தகரத்தால் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments