கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாதிப்பை ஏற்படுத்திய சூறைக்காற்று

0 1499

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பிலிப்பைன்சில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளை கொண்ட பிலிப்பைன்சில் ஆண்டுக்கு சராசரியாக 20 சூறாவாளிகள் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், கியூஸோன் (Quezon), காமரைன்ஸ் (Camarines)) உள்ளிட்ட மாகாணங்களில் மணிக்கு 110 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments