வங்க கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம்

0 6325
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக உருமாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக உருமாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள காணொலியில், தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 15-ம் தேதி மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16-ம் தேதி புயலாகவும் உருமாறக்கூடும் என கூறியுள்ளார். 

மேலும், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு கடலோர பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments