சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை என்ற தகவலுக்கு ட்ரம்ப் மறுப்பு

0 1147

வர்த்தக ஒப்பந்தம் குறித்து சீனாவுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை என்ற தகவலுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சீர்குலைத்த வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டும் வரும் வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் கையெழுத்தானது.

இந்த நிலையில், சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸ், அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ளது. நோய் தொற்றால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டே அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனிடையே சீனாவுடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ட்ரம்ப் மறுப்பு தெரிவித்ததுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தற்போது பேச விரும்பவில்லை என்று குறிப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments