சிவப்பு மண்டலத்தில் வங்கிகளின் கடன்..!

0 2905

ஊரடங்கின் காரணமாக தற்போது நிலுவையில் உள்ள  72 சதவீத வங்கிக் கடன்கள் மற்றும்  62 சதவீத முதலீடுகள் ஆபத்தான சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலம் என மத்திய அரசு பிரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் நிலவரப்படி வங்கிக்கடன்கள் 72 லட்சம் கோடி ரூபாயாகவும், முதலீடுகள் 82 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன. இவை இப்போது சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எந்த ஒரு பொருளாதார  தாமதமும் வங்கிகளுக்கு அழுத்தம் தருவதாக இருக்கும் என்றும்,  வரும் மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன்களின் சுமை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments