மே 17-க்கு பிறகு கூடுதல் தொழிற்சாலைகளை இயக்குவது குறித்து முதலமைச்சர் இன்று மாலை ஆலோசனை

0 1958

மே 17ஆம் தேதிக்கு பிறகு கூடுதல் தொழிற்சாலைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா ஊரடங்கின் மூன்றாம் கட்டத்தில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 17க்கு பிறகு ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் சலுகைகளின் அடிப்படையில், சிறு, குறு உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்

பொருளாதாரத்தை மேம்படுத்த தொழிற்சாலைகள் இயங்க வேண்டியது அவசியம், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற தொழிற் நிறுவனங்கள் தயாராக உள்ளன, சிறப்பு சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலதிபர்கள் இந்த கூட்டத்தில் வலியுறுத்த உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, மாவட்ட வாரியாக எந்தெந்த தொழிற்சாலைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments