கொரோனாவைத் தடுக்க குறைந்த விலையில் மருந்துகள், சிகிச்சைகள் வழங்க ஜி 20 வர்த்தக மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்

0 996

கொரோனாவை தடுக்க தேவையான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் போன்றவற்றை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜி 20 நாடுகளின் வர்த்தக முதலீட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அத்தியாவசியமான மருந்துகள், சிகிச்சைகள், பரிசோதனைக் கருவிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காக்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் பியூஷ் கோயல் உலக நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.இதே போன்றதொரு கோரிக்கையை அவர் கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments