சீனாவில் அமெரிக்கா செய்துள்ள முதலீடு திரும்பப் பெறப்படும் - டிரம்ப்

0 5546

சீனாவில் அமெரிக்கா செய்துள்ள பலநூறு கோடி ரூபாய் முதலீட்டைத் திரும்பப் பெறப்போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்குக் காரணம் சீனா தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்காகச் சீனாவிடம் இழப்பீடு பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் அமெரிக்கா செய்துள்ள முதலீடுகள் திரும்பப் பெறப்படுமா என்பது குறித்து டொனால்டு டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ஓய்வூதிய நிதியில் இருந்து சீனாவில் முதலீடு செய்துள்ள பல நூறு கோடி டாலர்களைத் திரும்பப் பெறப்போவதாகத் தெரிவித்தார்.

மற்றொரு வினாவுக்குப் பதிலளித்த டிரம்ப், நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments