மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

0 3319

டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு தொடர்பாக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல்படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி டாஸ்மாக் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பபட்டது.

அந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம், தேமுதிக சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments