சிறுமி ஜெயஸ்ரீயை எரித்து கொன்றவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

0 9093

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே சிறுமியை எரித்துக் கொலை செய்தவர்களை போலீசார் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

சிறுமதுரை கிராமத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் தெரிவித்ததுடன் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருங்காலத்தில் இது போன்ற கொடூர செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், ஊரடங்கிற்கு இடையே டாஸ்மாக் கடை திறப்பது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தேமுதிக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments