கொரோனா சோதனை செய்ய, தனிமைப்படுத்த வழிமுறைகள் வெளியீடு

0 1556

கொரோனா சோதனை செய்யவும், தனிமைப்படுத்துவதற்குமான வழிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே கொரோனா சோதனை செய்யப்படும். கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இல்லையெனில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

கொரோனா இல்லையென்றால் 7 நாட்கள் விடுதியில் கண்காணிப்பில் வைக்கப்படுவர். அதன்பின் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைக்கப்படுவர்.

வெளிநாடுகள், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்கள், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments