சிறப்பு ரயில்களில் பயணம் செய்யச் சேருமிட முகவரி குறிப்பிடுவது கட்டாயம்

0 1387

சிறப்பு ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யச் சேருமிட முகவரியைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கும் பல்வேறு மாநிலத் தலைநகரங்களுக்கும் இடையே மொத்தம் 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பயணம் செய்ய ஒருவாரம் முன்கூட்டி ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன் பதிவு செய்யலாம். அதேநேரத்தில் இந்தப் பயணச்சீட்டை முன்பதிவு செய்யச் சேருமிட முகவரியைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் தொடர்புகளைக் கண்டறிய அரசுக்கு இது உதவியாக இருக்கும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் ரத்து செய்வதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பு வரை அனுமதிக்கப்படுகிறது. பயணக் கட்டணத்தில் பாதித் தொகை ரத்துக் கட்டணமாகப் பிடித்துக் கொள்ளப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments