நாடு கடத்தப்படுவதற்கு எதிராக இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு அனுமதி மறுப்பு

0 2384

இங்கிலாந்தில் இருந்து தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

11 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.

நாடு கடத்த நீதிமன்றம் அனுமதித்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

வேறு சட்ட ரீதியான வாய்ப்புகள் இல்லை என்பதால், அடுத்த 28 நாட்களுக்குள் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வங்கிகளில் தான் பெற்ற கடனை நூறு விழுக்காடு திருப்பிச் செலுத்த சம்மதிப்பதாகவும், அதை ஏற்றுக்கொண்டு தன்மீதான வழக்குகளை முடிக்க வேண்டும் என்றும் அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments