கொரோனாவை முன்னிட்டு சிக்கன நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

0 4506

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளின் பின்னணியில் ,பல சிக்கன நடவடிக்கைகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக குடியரசுத் தலைவருக்காக திட்டமிடப்பட்ட 10 கோடி மதிப்பிலான பென்ஸ் ஆடம்பர  காரை வாங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர் அளிக்கும் விருந்திலும் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகம் செலவு செய்து மலர் அலங்காரங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்பதுடன் அங்கு நடக்கும் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்கவும் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இவற்றில் இருந்து மிச்சம் பிடிக்கப்படும் தொகை கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments