கடனை 100 சதவீதம் திருப்பிச் செலுத்துவதாக விஜய் மல்லையா அறிவிப்பு

0 1951

வங்கிகளில் தான் பெற்ற கடனை நூறு விழுக்காடு திருப்பிச் செலுத்துவதாகவும், அதை ஏற்றுக்கொண்டு தன்மீதான வழக்குகளை முடிக்க வேண்டும் என்றும் அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பெற்ற கடன்  ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் லண்டனுக்குத் தப்பிச் சென்ற அவரை விசாரணைக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதை எதிர்த்த மல்லையாவின் மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பொருளாதார ஊக்குவிப்புக்கு இந்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்துள்ளதை விஜய் மல்லையா டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

அரசுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களை நூறு விழுக்காடு திருப்பிச் செலுத்துவதாகவும், அதை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டு வழக்குகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments