பிஎஸ் 4 தரங்கொண்ட புதிய வாகனங்களைப் பயன்படுத்திய வாகனங்களாகப் பதிவு செய்து குறைந்த விலைக்கு விற்க திட்டம்

0 2021

பிஎஸ் 4 தரங்கொண்ட புதிய வாகனங்களைப் பயன்படுத்திய வாகனங்களாகப் பதிவு செய்து குறைந்த விலைக்கு விற்க வாகன விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஊரடங்கை விலக்கிய பின் பிஎஸ் 4 தரமுள்ள வாகனங்களில் 10 விழுக்காட்டை விற்கலாம் என உச்சநீதிமன்றம் தளர்வு அளித்தது. கார்கள், சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்கள் ஆகியவற்றைவிட இருசக்கர வாகனங்களே அதிகம் உள்ளதால் அவற்றை ஏற்கெனவே விற்ற பழைய வாகனங்களாகக் காட்டி மறு விற்பனை செய்ய வாகன விற்பனையகங்கள் திட்டமிட்டுள்ளன.

இதனால் பழைய வாகனங்கள் அளவுக்கு விலையைக் குறைப்பதுடன், மீண்டும் ஒருமுறை சாலைவரி செலுத்தவும், உரிமை மாற்றுக் கட்டணம் செலுத்தவும் வேண்டியிருக்கும். இதனால் விற்பனையாளருக்கு நிதிச்சுமை அதிகரித்தாலும், இத்தகைய வாகனங்களை இனி எப்போதும் விற்க முடியாது என்பதால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments