சென்னையில் ஒரே நாளில் 6டாக்டர்களுக்கு கொரோனா

0 2788

சென்னையில் இன்று ஒரே நாளில் 6 பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும் நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்,சென்னை அரசு பல் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும்  3 பெண் மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் மற்றும் செவிலியருக்கும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம், எழும்பூர், சூளைமேடு, அயனாவரம் பகுதிகளை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 மருத்துவர்கள் உட்பட 12 மருத்துவப் பணியாளர்களுக்கு தொற்று பரவியுள்ளதை அடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments