பொதுமுடக்கம் காரணமாக ஏப்ரலில் 2.70 கோடி பேர் வேலையிழப்பு

0 2423

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார தேக்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் வரை 2 கோடியே 70 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மே 10 ஆம் தேதியுடன் 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையிழப்பு ஏற்பட்டவர்களில் 86 விழுக்காடு பேர் ஆண்கள் என்பதும் அவர்களில் 44 விழுக்காடு பணியாளர்கள் இளைஞர்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கம் ஆகியவை காரணமாக விமான நிறுவனங்கள், தொழிற்சலைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சேவைகள் போன்றவை பொருளாதாரத்தின் பல துறைகளை ஆழமாக பாதித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments