இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எப்போது?

0 548

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா அபாயம் தொடர்ந்து வரும் நிலையில், ஜூன் மாதமே தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் இதுதொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments