என்று தணியும் கொரோனா பாதிப்பு ? உயரும் உயிர்ப்பலியால் உலக நாடுகள் திணறல்

0 1480
என்று தணியும் கொரோனா பாதிப்பு ? உயரும் உயிர்ப்பலியால் உலக நாடுகள் திணறல்

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

அமெரிக்காவில் உயிர்ப்பலி  84 ஆயிரத்தை நெருங்க, ரஷியாவில், கடந்த 11 நாட்களாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்... 

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 80 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்தை நெருங்குகிறது. அங்கு, ஒரே நாளில் 444 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 84 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.ரஷியாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 28 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 2 ஆயிரத்து 200 தாண்டி விட்டது. 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுவது, ரஷியாவில் இது 11- வது நாளாகும்.

இங்கிலாந்தில் ஒரே நாளில் 494 பேர் பலி ஆனதால் உயிரிழப்பு 33 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 242 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.சிலியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பிரேசிலில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, 195 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 12 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 958 பேருக்கும், சவுதி அரேபியாவில் ஆயிரத்து905 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது .துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 639 பேரும், ஸ்பெயினில் ஆயிரத்து 575 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இத்தாலியில் உயிரிழப்பு 30 ஆயிரத்து 500 ஐ தாண்ட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பிரான்சில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கி விட்டது.மெக்சிகோ, பாகிஸ்தான், கத்தார், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments