கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது பொதுமக்கள் கையில் தான் உள்ளது - முதலமைச்சர்

0 2434
கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா தொற்று பரவியதை தடுக்க அரசு முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா தொற்று பரவியதை தடுக்க அரசு முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

3ம் கட்ட ஊரடங்கு நிறைவுபெறவுள்ள நிலையில், அதனை நீட்டிப்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது பொதுமக்கள் கையில் தான் உள்ளது என்றும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

நோய் தொற்று அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் பூரண நலமடைந்து விடுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரபலை தடுக்க கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறிய முதலமைச்சர், வேறு இடத்திற்கு சென்றால் நஷ்டம் ஏற்படும் என்று கூறி வியாபாரிகள் மறுத்து விட்டதாக விளக்கம் அளித்தார்.

வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களையும் படிப்படியாக மாநிலத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். கொரோனா பரவல் தொடர்பாக மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

10 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டார். பருவமழை துவங்க இருப்பதால், தூர்வாரும் பணிகள், குடிமராமத்து பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் தொழில் நிறுவனங்கள் செயல்படலாம் என்றும், விதி மீறல் காரணமாக சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்களுக்குப் பின் திறக்க அனுமதி வழங்கலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments