மின் நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

0 3456
மின் நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மின் நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கப்படும் என்றும், அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப் படும் என்றும் அறிவித்தார்.

தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகிய வற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கூறிய அவர், நலிவடைந்த தொழிற்சாலை களுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்றார்.

நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அவர், நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள் என்றார்.

உள்ளூர் நிறுவனங்களை, உலகள விலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், ஜன்தன், ஆதார் மூலம், பயனாளிகளுக்கு நிவாரணம் நேரிடையாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பிபிஇ கிட்டுகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ள தாகவும் அவர் கூறினார். தற்சார்பு நாடாக இந்தியாவை மாற்றுவதே, பிரதமர் மோடி தலைமை யிலான அரசின் முக்கிய நோக்கம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 200 கோடி ரூபாய்க்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த டெண்டர்கள் அனைத்தும் இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றார். இதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் நம் பிக்கை தெரிவித்தார். 

இவை தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும் என்றும், மேலும், இவை 'மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனித வளம், தேவை மற்றும் தொழில் நுட்பம் ஆகிய 5 தூண்களால் அமைந்துள்ளதாக வர்ணித்த நிர்மலா சீதாராமன், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவித்துள்ள 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட் டங்களுக்கு 'தன்னிறைவு இந்தியா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

கொரோனா நிகழ்வை கடவுளின் செயலாக கருதி, ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.

வங்கி அல்லாத வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் சிறப்பு மூலதனம் வழங்கப்படும் என்றும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப் படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments